புஷ்கர் & காயத்ரி இயக்கத்தில் பார்த்திபன் – ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

Last Modified வெள்ளி, 13 மார்ச் 2020 (17:40 IST)

இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியவர்கள் இயக்கும் புதிய வெப் சீரிஸில் பார்த்திபன் மற்றும் கதிர் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர்.

கணவன் மனைவியான இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி இயக்கிய ஓரம்போ மற்றும் வ குவார்ட்டர் கட்டிங் ஆகிய படங்கள் வித்தியாசமான படங்களாக ரசிகர்களால் பாராட்டப்பட்டவை இதையடுத்து இவர்கள் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாக்கிய விக்ரம் வேதா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அதன்
மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான இவர்கள் இந்தியில் அமீர்கானை வைத்து அந்த படத்தின் ரீமேக்கை இயக்க முயன்றனர். ஆனால் அந்த முயற்சி கைகூடவில்லை. அதனால் இப்போது அவர்கள் வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி வருகின்றனர்.

இதில் நடிகர் பார்த்திபன் மற்றும் கதிர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, இந்த சீரிஸை அமேசான் ப்ரைம் மற்றும் புஷ்கர் காயத்ரி ஆகியோர் தயாரிக்கின்றனர். இது முழுக்க முழுக்க நகைச்சுவை சீரிஸாக இருக்கும் என சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :