நான் புரட்சியுடன் அரசியலுக்கு வருவேன் - நடிகர் பார்த்திபன்
நான் புரட்சியுடன் அரசியலுக்கு வருவேன் - நடிகர் பார்த்திபன்
தமிழ் சினிமாவில் புதிய பாதை என்ற படத்தின் மூலம் மூலம் இயக்குநர், நடிகரான அறிமுகமானவர், ராதாகிருஷ்ணன் பாத்திபன். இவர் சமீபத்தில் நடித்து வெளியான ’ஒத்த செருப்பு’ படம் பலரையும் கவர்ந்தது. இவர் அவ்வப்போது பல அதிரடி கருத்துகளை தனது வித்தியாசமான முறையில் வெளிப்படுத்துவார்.
இந்நிலையில், பார்த்திபன் நான் அரசியலுக்கு வருவேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கோவையில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது :
நான் அரசியலுக்கு வருவது எப்போது என்பதை காலம்தான் முடிவு செய்யும் என தெரிவித்துள்ளார்.
மேலும், சினிமாவில் சாதித்தபின் அரசியலுக்கு வருவேன் ; அப்படி நான் அரசியலுக்கு வரும்போது புரட்சியுடன் தான் வருவேன். என்னுடைய ஒத்தசெருப்பு படத்திற்கு அரசு சரியான அங்கீகாரம் கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.