வியாழன், 12 பிப்ரவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : வியாழன், 19 ஜூன் 2025 (19:29 IST)

'ஜவான்’ படத்திற்கு பாதிக்கு மேல் இசையமைத்தவர் சாய் அபயங்கரா? அட்லி தேர்வின் ரகசியம்..!

'ஜவான்’ படத்திற்கு பாதிக்கு மேல் இசையமைத்தவர் சாய் அபயங்கரா? அட்லி தேர்வின் ரகசியம்..!
இயக்குநர் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தேர்வு செய்யப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏ.ஆர். ரகுமான், அனிருத் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்த அட்லி எப்படி ஒரு புதிய இசையமைப்பாளரை தேர்வு செய்தார் என்பதே பலரின் கேள்விக்குக் காரணமாக இருந்தது.
 
இந்த நிலையில், அட்லி அவரைத் தேர்வு செய்ய முக்கிய காரணம், அவர் இசையமைப்பாளர் அனிருத்திடம் உதவி இசையமைப்பாளராகப் பணிபுரிந்தவர் என்பதுதான் என்று கூறப்படுகிறது. 
 
அதுமட்டுமின்றி, அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'ஜவான்' படத்தின் முக்கிய பின்னணி இசைகளை அவர்தான் அமைத்துள்ளார். அப்போது அவருடன் வேலை செய்யும்போது, அட்லிக்கு அவர் நெருங்கிய நண்பராகிவிட்டதாகவும், அதன் காரணமாகவே அட்லி தனது அடுத்த படத்திற்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.