ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 25 பிப்ரவரி 2021 (12:41 IST)

மணக்கோலத்தில் இருக்கும்போது ‘பாபா’ முத்திரையை காண்பித்த ஹிட் பட இயக்குனர்!

மணக்கோலத்தில் இருக்கும்போது ‘பாபா’ முத்திரையை காண்பித்த ஹிட் பட இயக்குனர்!
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற திரைப்படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமிக்கும் பிரபல இயக்குனர் அகத்தியனின் மகள் நிரஞ்சனிக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தது
 
இந்த நிலையில் இன்று தேசிங்கு பெரியசாமிக்கும் பிரபல இயக்குனர் அகத்தியனின் மகள் நிரஞ்சனிக்கும் சிறப்பாகத் திருமணம் நடைபெற்றது. கோலிவுட் திரையுலகில் உள்ள பலர் நேரில் வந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர் 
 
இந்த நிலையில் மணக்கோலத்தில் இருந்த தேசிங்குபெரியசாமி ரஜினி அடிக்கடி காண்பிக்கும் பாபா முத்திரையை காண்பித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மணக்கோலத்தில் இருக்கும் போது கூட இயக்குனர் தேசிங்குபெரியசாமி பாபா முத்திரை காண்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஏற்கனவே கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தை பார்த்து ரஜினிகாந்த் தேசிங்குபெரியசாமிக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்தார் என்பது தெரிந்ததே