வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 24 பிப்ரவரி 2021 (19:30 IST)

நாளை மறுநாள் செய்தியாளர் சந்திப்பில் ரஜினி என்ன கூறுவார்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நாளை மறுநாள் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் நாளை மறுநாள் செய்தியாளர் சந்திப்பில் அவர் என்ன கூறுவார் என்பது குறித்த யூகங்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் 
 
சமீபத்தில் கமல்ஹாசன் ரஜினியை சந்தித்த நிலையில் அவருக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை எடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் சசிகலா தலைமையிலான கூட்டணி ஒன்று புதிதாக அமைவதை அடுத்து ரஜினியின் முடிவு வித்தியாசமாக ஏதாவது இருக்கலாம் என்று கூறப்படுகிறது 
 
அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்கு தனது ஆதரவு என்று ரஜினி அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற முடிவை பரிசீலனை செய்து அரசியலுக்கு வருவேன் என்று கூறவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இவற்றில் ரஜினிகாந்த் நாளை மறுநாள் என்ன கூறுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்