ரஜினி வீட்டுக்குப் பக்கத்தில் வீடு கட்டும் தனுஷ்… மதிப்பு இத்தனை கோடியா?

Last Modified செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (15:35 IST)

நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் கட்டும் வீட்டின் மதிப்பு 80 கோடி என சொல்லப்படுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லம், நடிகர் ரஜினிகாந்த் இல்லம் என அரசியல் வட்டாரத்தின் பிஸியான இடமாக இருப்பது போயஸ் கார்டன். தற்போது தனது மாமனார் ரஜினி வீடு உள்ள போயஸ் கார்டனிலேயே நடிகர் தனுஷ் இடம் ஒன்றை வாங்கியுள்ளார்.

அடுத்ததாக ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க அமெரிக்கா செல்ல உள்ள தனுஷ் அதற்கு முன்பாக போயஸ் கார்டன் இடத்தில் சில நாட்களுக்கு முன்னர் பூமி பூஜை நடந்துள்ளது. பூமி பூஜையில் நடிகர் ரஜினிகாந்த் அவரது துணைவியார் லதா ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அதையடுத்து இப்போது அந்த படத்தின் மதிப்பு 80 கோடி என்ற செய்தி வெளியாகியுள்ளது. இந்த 80 கோடி பணத்துக்காக அவர் வரிசையாக படங்களில் நடிக்க கமிட்டாகி கொண்டே இருக்கிறாராம்.இதில் மேலும் படிக்கவும் :