திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 18 பிப்ரவரி 2021 (15:20 IST)

சந்திரமுகி 2 என்ன ஆனது? பி வாசு எடுத்த முடிவு!

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கும் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டு நீண்ட நாட்கள் ஆன நிலையில் அடுத்த கட்ட அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சந்திரமுகி’ திரைப்படம் விரைவில் உருவாக இருப்பதாக தகவல் வெளியானது. பி வாசு இயக்க ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் சிவாஜி பிலிம்ஸ் வசம் உள்ள நிலையில் அதை ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாம் தயாரிப்பு நிறுவனம். மிகப் பிரம்மாண்டமாக 100 கோடி ரூபாய் செலவில் தயாராக உள்ளது இந்த திரைப்படம்.

ஆனால் அறிவிப்புக்கு பிறகு வேறு எந்தவொரு அப்டேட்டும் வெளியாகவில்லை. ராகவா லாரன்ஸ் இப்போது ருத்ரன் படத்தில் பிஸியாக உள்ளார். அதனால் இயக்குனர் பி வாசு சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் உள்ளாராம். சிம்புவும் விரைவில் கதைக் கேட்க உள்ளதாக சொல்லப்படுகிறது.