நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்திக்கிறார்.....
நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் நாளை மறுநாள் செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் நடிகர் ரஜினிகாந்த். இவர் சமீபத்தில் அண்ணாத்த பட ஷூட்டிங்கில் இருந்தபோது படக்குழுவினர் கொரொனாவால் பாதிக்கப்பட்டனர். பின்னர் ஷுட்டிங் நிறுத்தப்பட்டது. அப்போது உடல்நிலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினி, சென்னை திரும்பிய பின்னர், ஓய்வெடுத்து வந்தார்.
அதன்பிறகு தான் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்து அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் வரும் தேர்தலில் தன் கட்சிக்கு ஆதரவு கொடுக்குமாறு ரஜினியிடம் கூறியதாகத் தெரிகிறது.
எனவே நாளை மறுநாள் சென்னையிலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகிறது.