1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Shruthihaasan hint about her character in coolie

கூலி படத்தில் நான் யார்?... ஸ்ருதிஹாசன் பகிர்ந்த சீக்ரெட்!

லோகேஷ் கனகராஜ்
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக ரஜினிகாந்த்- லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள ‘கூலி’ படம் அமைந்துள்ளது. இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், அமீர்கான், உபேந்திரா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் தற்போது ப்ரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கூலி படம் பற்றி பேசியுள்ள ஸ்ருதிஹாசன் தன்னுடைய கதாபாத்திரம் பற்றி பேசியுள்ளார். அதில் “நான் சத்யராஜ் சாரின் மகளாக ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த படத்தில் அதிகளவில் ஆண் கதாபாத்திரங்களாகவே இருந்தாலும் என் கதாபாத்திரத்தைப் பற்றிதான் அனைவரும் பேசிக்கொள்வார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
கலவையான விமர்சனம் இருந்தும் முதல் நாள் வசூலில் கலக்கிய ‘தலைவன் தலைவி’!