1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 28 டிசம்பர் 2022 (13:53 IST)

தோனியின் மகளுக்கு வந்த மெஸ்ஸியின் ஜெர்ஸி: வைரல் புகைப்படம்

ziva
தோனியின் மகளுக்கு வந்த மெஸ்ஸியின் ஜெர்ஸி: வைரல் புகைப்படம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் மகளுக்கு அர்ஜென்டினாவின் மெஸ்ஸி தனது ஜெர்சியை அனுப்பி வைத்துள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 
தோனியின் மகள் ஜிவாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மெஸ்ஸி அனுப்பிய ஜெர்சியை ஜீவா அணிந்து உள்ள புகைப்படம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
கிரிக்கெட் விளையாட்டுக்கு வருவதற்கு முன்பே தோனிக்கு கால்பந்து வீரராக தான் வரவேண்டும் என்ற ஆசை இருந்தது என்றும் குறிப்பாக அவர் கோல் கீப்பர் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்தார் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் கால்பந்து போட்டியின் தீவிர ரசிகரான தோனி, மெஸ்ஸியின் பரம ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த தோனி போலவே மகள் ஜீவாவும் மெஸ்ஸியின் ரசிகை என்ற நிலையில் தனது ஜெர்சியை ஜீவாவுக்கு மெஸ்ஸி அனுப்பி வைத்துள்ளார்
 
Edited by Mahendran