புதன், 4 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 6 ஜனவரி 2023 (13:39 IST)

கேள்விப்பட்டிருக்கியா? ஆட்டநாயகன்! வாரிசு டயலாக்கில் மாஸ் காட்டிய தோனி! – ட்ரெண்டிங் வீடியோ!

சமீபத்தில் வெளியான ‘வாரிசு’ பட ட்ரெய்லரில் வரும் வசனங்களை வைத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனிக்கு செய்துள்ள வீடியோ வைரலாகியுள்ளது.

தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களால் அளவுக்கு அதிகமாக நேசிக்கப்படும் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி சமீபமாக அனைத்து விதமான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும், ஐபிஎல்லில் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

2008 தொடங்கி இப்போது வரை சிஎஸ்கே அணியின் கேப்டனாகவும் தோனியே இருந்து வருகிறார். இடையே சுரேஷ் ரெய்னா, ஜடேஜா போன்றோர் குறிப்பிட்ட காலம் கேப்டனாக இருந்திருந்தாலும், சிஎஸ்கே ரசிகர்கள் மனதில் நிரந்தர கேப்டனாக தோனியே குடிக் கொண்டிருக்கிறார்.



இந்நிலையில் சமீபத்தில் வெளியான ‘வாரிசு’ படத்தின் ட்ரெய்லரில் வரும் வசனங்களை கொண்டு தோனிக்காக சிஎஸ்கே நிர்வாகம் ஒரு வீடியோவை தயார் செய்துள்ளது. அதில் “க்ரவுன்ட் முழுக்க உன் ஆளுங்க இருக்கலாம். ஆனா ஆடியன்ஸ் ஒருத்தனுக்குதான் விசில் அடிப்பாங்க.. கேள்விப்பட்டிருக்கியா? ஆட்டநாயகன்” என்னும் வசனத்திற்கு ஆடியன்ஸையும், தோனி பந்தை விளாசுவதையும் வைத்து செய்துள்ள எடிட் ரசிகர்களிடையே ட்ரெண்டாகியுள்ளது.

அந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்துள்ள பலர் இந்த வசனம் கிரிக்கெட்டில் தோனிக்கு மிகவும் பொருத்தமான வசனம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

Edit by Prasanth.K