சர்காரை ஓரங்கட்டுங்க..! இனி தனுஷின் மாரி கொண்டாட்டம்..!

Last Updated: புதன், 7 நவம்பர் 2018 (18:57 IST)
தனுஷின் வட சென்னை படத்தை காலத்துக்கும் ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். ஏனென்றால் படத்தின் கதை, வசனம், நடிப்பு என எல்லா விஷயங்களும் அப்படத்தில் அனைவராலும் பாராட்டப்பட்டது.
பல வருடங்களாக அப்படத்திற்காக கலைஞர்கள் உழைத்திருக்கிறார். அந்த உழைப்பு தக்க பலனை அளித்திருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து தனுஷின் மாரி 2 படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது, அதன் தேதி உறுதியாக இன்னும் தெரியவில்லை.
 
வட சென்னை படத்தில் எப்படி ஒவ்வொரு நாளும் படத்தில் நடித்த கேரக்டர்களின் பெயர் மற்றும் அவர்களின் லுக்கை ரிலீஸ் செய்தார்களோ அதேபோல் மாரி 2 படத்திற்கும் அப்டேட் கொடுக்க உள்ளார்களாம்.
 
அதனால் இனி வரும்  நாட்களில் தனுஷின் மாரி 2 கொண்டாட்டத்தையே  எதிர்பார்க்கலாம். 


இதில் மேலும் படிக்கவும் :