நோகாமல் நோம்பு கும்பிடும் பிரபலங்களின் வாரிசுகள்!! தனுஷ் பட நடிகை பளீச்!!!

act
Last Modified ஞாயிறு, 4 நவம்பர் 2018 (14:03 IST)
சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த போது பலர் தம்மை நிராகத்ததாக அனேகன் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்த அமிரா தஸ்தூர் தெரிவித்துள்ளார்.
 
இந்தி திரையுலகில் தற்பொழுது டாப்பில் இருக்கும் அமிரா தஸ்தூர் தாம் திரையுலகில் நுழைவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டேன் என விவரித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் பேசுகையில், நான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு ஏகப்பட்ட கம்பெனிகளின் ஏறி இறங்கினேன். ஆனால் பலர் என்னை நிராகரித்தனர். இறுதியில் 2013ல் இஷாக் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் கஷ்டப்பட்டு இந்த நிலையை அடைந்திருக்கிறேன்.
 
ஆனால் பிரபலங்களின் வாரிசுகள் எந்த கஷ்டமும் படாமல் எளிதாக படவாய்ப்பை பெறுகிறார்கள். அவர்களுக்கு நடிப்புத் திறமை இருக்கிறதா என டெஸ்ட் வைக்காமலேயே அவர்கள் எல்லாம் சினிமா துறையில் நுழைகிறார்கள் என அவர் கூறினார். 


இதில் மேலும் படிக்கவும் :