புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 8 அக்டோபர் 2018 (18:58 IST)

தனுஸ்ரீதத்தா பாலியல் புகார் : நானா படேகர் மீது 4 பிரிவுகளில் வழக்கு...

பாலிவுட் நடிகை தனுஸ்ரீதத்தா, நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிஇருந்தார். இந்த புகாரை ஏற்று நானா படேகர் மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
கடந்த  2008–ம் ஆண்டு ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ என்ற பாலிவுட் படத்தின்படப்பிடிப்பின் போது நானா படேகர் தன்னிடைம் அத்துமீறி நடந்து கொண்டதாகதனுஸ்ரீதத்தா புகார் தெரிவித்தார்,  மேலும் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யாதனக்கு நேர்ந்த அந்த பாலியல் தொல்லை சம்பவத்துக்கு உடந்தையாக இருந்தார் என்றும் தனுஸ்ரீதத்தா கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 
 
இதுபோல் டைரக்டர் விவேக் அக்னிகோத்ரி ‘சாக்லேட்’ படப்பிடிப்பில் எனது உடைகளை களைந்து விட்டு நிர்வாணமாக நிற்கும்படி கூறினார் என்று அவர் மீதும் தனுஸ்ரீதத்தா பாலியல்புகார் கூறினார்.இந்த நிலையில் தனுஸ்ரீதத்தா மும்பை ஓஸிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நானா படேகர், கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமீர் சித்திக்,இயக்குனர் ராகேஷ் சாரங், மராட்டிய நவநிர்வான் சேவா கட்சி நிர்வாகிகள் ஆகியோர்மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து இருப்பதாக தனுஸ்ரீதத்தா கூறினார்.தனுஸ்ரீதத்தா அளித்த புகாரின் பேரில் நானா படேகர் மீது 354 (மான பங்கம் செய்தல்) 354(ஏ), 34 மற்றும் 509 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.