புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 2 அக்டோபர் 2018 (18:40 IST)

ஜான்சி ராணியாக மாறிய பாலிவுட் ’குயின்…’

"மணிகர்ணிகா தி குயின் ஆப் ஜான்சி " என்ற இந்தி படம் ராணி லக்ஷ்மி பாய் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஜான்சி ராணியின் கதையை இந்தி தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் குறும்படம், தொலைக்காட்சி தொடர் என காட்சிபடுத்தப்பட்டு பிரபலமடைந்த ஒன்று. 
 

ராதா கிருஷ்ணா ஜகர்லாமுதி  இந்த படத்தை இயக்கியுள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் கமல் ஜெயின் மற்றும் நிஷாந்த் பிட்டி ஆகியோர்  இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.  கே. வி விஜயேந்திர பிரசாத் இந்த படத்தின் கதை எழுதியுள்ளார்.  குயின் படத்தின் மூலமாக உலகப்புகழ்பெற்ற  பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் இந்த படத்தில் ஜான்சி ராணி லட்சுமி பாய் வேடத்தில் ஒரு வீர மங்கையாக நடித்து அசத்தியுள்ளார்.

மேலும், அங்கிதா லோகாந்த், ஜீசு செங்குப்தா, ஜீஷான் அய்யூப் மற்றும் தாஹர் ஷபீர் ஆகியோர் முக்கிய  கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தியாவில் பிரிட்டீஷ் படையெடுக்க முடிவு செய்தபோது இந்தியா வளர்ச்சியடைந்து வரவேற்பைப் பெற்றது எனவும்,  பின்னர் மணிகர்ணிகா தனது தாய் நாட்டுக்காக போராட முடிவு செய்தாள் என அமிதாப் பச்சனின் கண்ணிய குரலில் டீஸர் தொடங்குகிறது. மானிகர்ணிகா வீர நடையோடு அரண்மனையில் நுழைவதில் இருந்து அறிமுகம் ஆரம்பமாகிறது. 

பிரிட்டிஷ் படையுடன் போர் தொடுக்க ஒரு குதிரையில் சவாரி செய்து  வீரமங்கையாக வலம் வரும் கங்கனா பட்டயத்தை நன்றாக கையாளக்கூடிய ஒரு கடுமையான தளபதியாக தோற்றமளிக்கிறார். கங்கனாவின்  வாள் சண்டை காட்சிகளில், ஜான்சி ராணியையே நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். அவள் மடியில் ஒரு குழந்தையுடன் தனது சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ஒரு ஷாட் உள்ளது. ஹரஹர மஹா தேவ் என்ற கங்காவின் கனீர் குரலோடு டீஸர் முடிவடைகிறது.