புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 8 அக்டோபர் 2018 (17:14 IST)

ஸ்ரீதேவியின் ஆவணப்படத்தில் நடிக்கும் பிரபல நடிகை

இந்திய சினிமாவில் சமீபகாலமாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் வருவது ட்ரெண்டாக மாறியுள்ளது. 'டர்ட்டி பிக்சர்ஸ்' படம் மூலம் ஆரம்பித்த இந்த ட்ரெண்ட் தற்போது 'நடிகையர் திலகம்' படம் வரை தொடர்ந்துள்ளது. 

இதற்கிடையே இந்திய சினிமாவின் 80களில் கொடிகட்டி பறந்து, பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் மர்மமான முறையில் இறந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வாழ்க்கை வரலாற்றை  ஆவண படமாக எடுக்க அவரது கணவர் போனி கபூர் தீவிர முயற்சியில் இருக்கிறார். இதில் ஸ்ரீதேவியாக நடிகை ரகுல் பிரிட் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஆனால் தெலுங்கில் தற்போது மறைந்த பிரபல நடிகர் என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதில் என்.டி.ஆராக நடித்திருப்பது அவரின் மகன் பால முரளி கிருஷ்ணா.
 
அவரின் மருமகனும் தற்போதைய முதல்வர் சந்திர பாபு நாயுடுவாக நடிக்க இருப்பது ரானா டகுபதியாம். இதுமட்டுமல்ல சாவித்திரியாக நடிக்க இருப்பது நித்யா மேனன். 
 
இவர்களுடன் நடிகை ஸ்ரீதேவியாக நடிக்க இளம் நடிகை ரகுல் பிரீத் சிங்கை தேர்வு செய்துள்ளனர் தெலுங்கு சினிமா உலகம்.