புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : வெள்ளி, 5 அக்டோபர் 2018 (15:42 IST)

பிரியங்கா சோப்ராவுக்கு டும் டும் ...!

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடிகர் விஜய்யுடன் தமிழன் படத்தில் நடித்திருந்தார்.
 
ஹாலிவுட் படங்கள் மற்றும் வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வந்த பிரியங்கா தன்னை விட 10 வயது சிறியவர் ஆன அமெரிக்காவை சேர்ந்த பாடகர் நிக் ஜோனசுடன் காதல் வயப்பட்டார். 
 
பிறகு இவர்கள் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஆகஸ்டு மாதம் மும்பையில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். இந்த வருடம் இறுதியில் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்று செய்தி வந்தது.
 
கடந்த வாரம் காதலி பிரியங்கா சோப்ராவை பார்க்க நிக் ஜோனஸ் இந்தியா வந்தார். பிரியங்கா சோப்ராவுடன் சேர்ந்து ஜோத்பூரில் உள்ள உமைத் பவான் அரண்மனையை சுற்றிவந்தார்.
 
தங்களது திருமணம் அந்த அரண்மனையில் நடத்துவதற்காக அவர்கள் பார்வையிட்டதாக கூறப்படுகிறது. ஜோத்பூரில் தான் திருமணம் என்பது மட்டும் உறுதியாகி உள்ளது.
 
பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் படங்களில் நடித்தாலும் இந்திய பாரம்பரிய முறைப்படி தான் தனது நிச்சயதார்த்தம் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
 
பிரியங்காவின் எண்ணத்திற்கு நிக் ஜோனசும் மதிப்பு கொடுத்து குடும்பத்துடன் இந்தியாவுக்கு வந்தார். பிரியங்கா, நிக் ஜோனஸ் நிச்சயதார்த்தம் இந்திய முறைப்படி பிரமாண்டமாக நடைபெற்றது. 
 
அதில் இந்தி பிரபலங்கள், தொழில் அதிபர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். மேலும் பிரியங்கா சோப்ரா நிக் ஜோனஸ் திருமணம் இரு நாட்டு முறைப்படியும் நடக்கும் என்கிறார்கள்.
 
அதற்கேற்றாற்போல் இருவரும் இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகளின் பாரம்பரிய திருமண உடைகளை தேர்ந்தெடுத்து வருகிறார்கள்.