1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 1 அக்டோபர் 2022 (15:46 IST)

வாத்தி படத்தின் தமிழக ரிலீஸில் நடந்த திடீர் மாற்றம்… நடந்தது என்ன?

தனுஷ் நடித்துள்ள வாத்தி படத்தின் ரிலீஸ் டிசம்பர் 2 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் நடித்துவரும் தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகும் திரைப்படத்திற்கு ‘வாத்தி’ மற்றும் ’சார்’ என்ற டைட்டில்கள் வைக்கப்பட்டு உள்லது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளன. இந்த படத்தை வெங்கட் அட்லோரி இயக்கி வருகிறார்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நாளை படத்தின் முதல் லுக் தற்போது வெளியாகியுள்லது. மேலும் டீசர் நாளை வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி வெளியாக் உள்ளது.

இந்த படத்தை தமிழக ரிலீஸ் உரிமையை பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான அன்புச் செழியன் வாங்கி இருந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அதில் இருந்து அவர் வெளியேறிவிட்டதாக சொல்லப்படுகிறது.