வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (19:00 IST)

'பொன்னியின் செல்வன்’ எந்த தியேட்டரில் ரிலீஸ்? அஸ்வின் டுவிட்

ashwin
பொன்னியின் செல்வன் திரைப்படம் எந்த திரையரங்கில் ஓடுகிறது என ரவிசந்திரன் அஸ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் நடந்த முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் உள்ள கெளஹாத்தி மைதானத்தில் 2வது டி20 போட்டி நடைபெற உள்ள நிலையில் அந்நகரில் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சி பெற்று வருகின்றனர்
 
 இந்த நிலையில் இன்று பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் அசாமில் உள்ள கெளஹாத்தியில் எந்த திரையரங்கில் இந்த படம் ரிலீசாகி உள்ளது என்றும் எந்த திரையரங்கில் தமிழில் ரிலீஸ் ஆகியுள்ளது என்றும் அஸ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு டுவிட்டர் பயனாளிகள் பலரும் பதில் அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran