வியாழன், 30 மார்ச் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (17:15 IST)

நான் நடித்த கேரக்டரில் தனுஷ் நடிப்பார்: பார்த்திபன்

Parthiban
நான் நடித்த கேரக்டரில் தனுஷ் நடிப்பார் என நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார். 
 
கார்த்தி மற்றும் பார்த்திபன் நடித்த ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் செல்வராகவன் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் பார்த்திபன் நடித்த கேரக்டரில் இரண்டாம் பாகத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இது குறித்து நடிகர் பார்த்திபன் தெரிவித்தபோது ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நான் நடித்த கேரக்டரில் தனுஷ் நடிப்பார் என்றும் அந்த கேரக்டருக்கு அவர் மிகவும் பொருத்தமாக இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்
 
ஏற்கனவே ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் முதல் பாகத்தில் அந்த கேரக்டரில் தனுஷ் தான் நடிக்க இருந்தது என்பதும் கடைசி நேரத்தில்தான் திடீரென பார்த்திபன் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva