1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated: வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (17:36 IST)

தனுஷின் ''நானே வருவேன்'' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

naane varuven
நடிகர் தனுஷின்  நானே வருவேன் படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய தகவலை தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார்.

செல்வராகவன் – தனுஷ் – ஐந்தாவது முறையாகவும், இவர்களுடன் யுவன் கூட்டணியில் 12 ஆண்டுகளுக்குப் பின், கலைப்புலி எஸ்தாணு தயாரிப்பில் உருவாகியுள படம்   நானே வருவேன்.

திருச்சிற்றம்பலம் வெற்றியைத் தொடர்ந்து, தனுஷின்  நானேவருவேன் செப்டம்பர் 29 ஆம் தேதி ரிலீஸாகும் என தயாரிப்பாளார் தாணு அறிவித்தபடி நேற்று ரிலீசாகி, படம்  நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், இப்படம் முதல் நாள் ரிலீஸான நேற்று ரூ.10 கோடியே 12 லட்சம் வசூலித்துள்ளதாக தாணு அதிகாரப்பூர்வதாக அறிவித்துள்ளார். இதனால், தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Edited by Sinoj