1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 19 செப்டம்பர் 2022 (11:17 IST)

பாடம் எடுக்க வருகிறார் “வாத்தி” – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vaathi
தனுஷ் நடித்து ரிலீஸுக்கு தயாராக உள்ள புதிய படமான “வாத்தி” ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லுரி இயக்கியுள்ள படம் வாத்தி. இந்த படம் தமிழில் “வாத்தி”, மற்றும் தெலுங்கில் “சார்” ஆகிய பெயர்களில் வெளியாகிறது. இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.


இந்த படத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்து இருப்பது தெரியவருகிறது. மேலும் இந்த படம் கல்வி துறையிலுள்ள ஊழல்கள், ஏழை மக்கள் நல்ல கல்வி கற்க முடியாத நிலை  ஆகியவை குறித்து அலசி ஆராயப்பட்டு உள்ளது என்பதும் இந்த படத்தின் டீசரில் இருந்து தெரியவருகிறது.

இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ள நிலையில் டிசம்பர் 2ம் தேதி படம் உலகம் முழுவதும் வெளியிடப்படுவதாக படத்தயாரிப்பு நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.