வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 19 செப்டம்பர் 2022 (11:02 IST)

நடு ரோட்டில் பைக்குக்கு பஞ்சர் போட்ட அஜித்! பைக்கர் பகிர்ந்த ஆச்சர்ய தகவல்!

Ajith
நடிகர் அஜித்குமார் சமீபத்தில் லடாக் பயணம் சென்ற நிலையில் பஞ்சர் ஆன பைக்கர் ஒருவருக்கு உதவிய தகவல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சினிமாவில் நடிப்பது தவிர பைக் பயணம் மீது தீராத ஆர்வம் கொண்டவர் அஜித்குமார். தற்போது எச்.வினோத் இயக்கத்தில் தனது அடுத்த படத்தில் நடித்து வரும் அஜித்குமார், சமீபத்தில் லடாக் பைக் ரைட் சென்ற சம்பவம் வைரலானது.

மலையாள நடிகை மஞ்சு வாரியரும் அஜித்துடன் லடாக் பைக் பயணம் மேற்கொண்டார். அதை தொடர்ந்து அஜித்தின் பைக் பயண புகைப்படங்கள், வீடியோக்கள் தொடர்ந்து வைரலாகி வருகின்றன.


இந்நிலையில் லடாக் பயணத்தில் நடந்த சுவாரஸ்யமான அனுபவங்களை சக பைக் ரைடரான மஞ்சு காஷ்யபா தெரிவித்துள்ளார். அதில் அவர் “எனது இமயமலை பயணத்தின் போது எனது பைக் பஞ்சர் ஆகிவிட்டது. பிஎம்டபிள்யூ 1250ஜிஎஸ்ஏ பைக்கில் வந்த அஜித் என்னுடைய பைக்கை அவரே சரிசெய்து கொடுத்தார். பின்னர் அடுத்த இரண்டு மணி நேரம் ஒன்றாக பயணித்தோம்” என்று கூறி அஜித்துடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.