1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (21:53 IST)

தனுஷுன் இணையும் லோகேஷ் கனகராஜ் பட நடிகர்...ரசிகர்கள் மகிழ்ச்சி

நடிகர் தனுஷ் விரைவில் லோகேஷ் கனகராஜ் பட நடிகருடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தனுஷ். இவர் நடிப்பில், சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் குவித்துள்ளது.

இதையடுத்து, கலைப்புளி தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள  நாவே வருவேன் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த  நிலையில், தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள  இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி பாராட்டைப் பெற்று வருகிறது. இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

தற்போது,  அருண் மதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் தயாராகவுள்ளது.

இப்படத்திற்கு, ஜிவி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.  இப்படத்தில் தனுஷுன் இணைந்து,  மா நகரம் படத்தில் நடித்த சந்தீப் கிஷன் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

மாநகரம் படத்தை  லோகேஷ் கனகராய் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.