1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By siva
Last Modified: வியாழன், 15 செப்டம்பர் 2022 (18:54 IST)

ஹீரோ வில்லன் இரண்டுமே தனுஷ் தான்; ‘நானே வருவேன்’ டீசர்

naane varuven
ஹீரோ வில்லன் இரண்டுமே தனுஷ் தான்; ‘நானே வருவேன்’ டீசர்
நடிகர் தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இம் மாதம் ரிலீசாக இருக்கும் நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது
 
ஒரு நிமிடம் 41 வினாடிகள் உள்ள இந்த டீசரில் தனுஷ், வில்லன் மற்றும் ஹீரோ என இரண்டு கேரக்டர்களில் நடித்துள்ளார் என்பதும் இந்த  இருவருக்கும் இடையே நடக்கும் போராட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன
 
இந்த காட்சிகளை அபாரமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் செல்வராகவன் பிரபு இந்துஜா யோகி பாபு உள்பட பலரது நடிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது 
 
செல்வராகவன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் நிச்சயம் தனுஷுக்கு மேலும் ஒரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது