1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 11 மே 2018 (20:26 IST)

சர்வதேச திரைப்பட விழாவில் தனுஷ் படம்

தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படமான தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பஃகீர் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.
 
ஹாலிவுட் டைரக்டர் கென் ஸ்காட் இயக்கியுள்ள தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பஃகீர் என்ற படத்தில் தனுஷ் ஹாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார். 
 
இப்படத்தில் பெர்னிஸ் பேஜா, பர்காட் அப்டி, எரின் மொரியார்ட்டி, அபெல் ஜாப்ரி போன்ற ஹாலிவுட் நடிகர்கள்  நடித்துள்ளனர்.
 
இந்த படத்தின் படப்பிடிப்பு  முடிவடைந்த நிலையில், தற்போது இந்தப் படம் கேன்ஸ் படவிழாவில் திரையிடப்பட உள்ளது. இதையடுத்து வரும் மே 30ம் தேதி பிரான்சில் ரிலீசாக உள்ளது. மேலும், அதே வாரத்தில் தமிழில் வாழ்க்கைய தேடி நானும் போனேன் என்ற தலைப்பில் ரிலீசாகவுள்ளது.