‘இன்று காலை 9 மணியில் இருந்தே ‘காலா’ பாடல்களைக் கேட்கலாம்’ – தனுஷ் அறிவிப்பு

CM| Last Modified புதன், 9 மே 2018 (11:55 IST)
இன்று காலை 9 மணி முதல் ‘காலா’ பாடல்களைக் கேட்கலாம் என அறிவித்துள்ளார் தனுஷ். 
ரஜினிகாந்த் நடிப்பில், பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காலா’. சமுத்திரக்கனி, நானா படேகர், ஈஸ்வரி ராவ், அருள்தாஸ், சுகன்யா, அஞ்சலி  பட்டேல், ஹுமா குரேஷி, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
 
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. உலகம் முழுவதும் ஜூன் மாதம் 7ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று மாலை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு மைதானத்தில் மிகப் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. திரையுலகப் பிரபலங்கள் பலர் இந்த விழாவில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
 
இந்நிலையில், இன்று காலை 9 மணியில் இருந்தே அனைத்து டிஜிட்டல் பிளாட்பார்ம்களிலும் ‘காலா’ படத்தின் இசையைக் கேட்கலாம் என ட்விட்டரில்  அறிவித்துள்ளார் தனுஷ். இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :