திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 10 ஜூன் 2021 (22:30 IST)

தனுஷ் பட பிரபலம் வீட்டில் விஷேசம்..

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் மற்றும் நடன இயக்குநராக அறியப்படுபவர் பாபா பாஸ்கர். இவர் வீட்டில் இன்று விஷேசம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் தனுஷ் நடித்த திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் நடன இயக்குநராக அறிமுகம் ஆனவர் பாபா பாஸ்கர். இப்படத்திற்குப் பின் குப்பத்து ராஜா உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு நடன இயக்குநராக அவர் பணியாற்றியுள்ளார்.

இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களிடம் பிரபலமனார். அதன்பின் சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.

இவரது மகள் சடங்கு நிகழ்ச்சிகள் இவரது வீட்டில் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் இன்று சமூகவலைதளங்களில் வைரலாகிறது.