திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 10 ஜூன் 2021 (18:48 IST)

சிவகார்த்தியேன் படத்தின் அடுத்த அப்டேட்

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள படங்களில் தொடர்ச்சியாக நடிக்க சிவகார்த்திகேயன் சம்மதித்துள்ளாராம்.

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் அசாத்தியமான வளர்ச்சிக் கண்டவர் சிவகார்த்திகேயன். ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜித்துக்கு பிறகு அவர்தான் என்ற அளவுக்கு அவரின் மார்க்கெட் சென்றது. ஆனால் சமீபகாலமாக அவர் தேர்வு செய்து நடித்த படங்கள் எல்லாம் தோல்வி அடையவே அவரின் மார்க்கெட் இப்போது 30 சதவீதம் வரை சுருங்கியுள்ளதாகக் கூறப்பட்டது.

இருப்பினும் சமீபத்தில் தியேட்டர் அதிபர்கள் வெளியிட்ட நடிகர்களின் லிஸ்டின் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகிய நடிகர்களுக்குப் பிறகு சூர்யாவை பின்னுக்குத்தள்ளி சிவகார்த்திகேயன் இடம் பிடித்தார்.

இந்நிலையில் மறுபடியும் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் அவரை மொத்தமாக 75 கோடு சம்பளம் பேசி சன் பிக்சர்ஸ் நிறுவனம் 5 படங்களுக்கான தேதிகளை வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் சுமார் ஒரு படத்துக்கு 15 கோடி சம்பளம் மட்டுமே சிவகார்த்திகேயன் பெறுகிறார். ஆனாலும் சன் பிக்சர்ஸ் எப்படியும் படத்தை பிரம்மாண்டமாக ப்ரமோட் செய்யும் என்பதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இணையதளத்தில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.