செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (15:16 IST)

முதல் நாளே ரசிகர்கள் அட்டகாசம்: கோயம்பேடு ரோஹினி தியேட்டரில் ஸ்க்ரீன் கிழிப்பு!

screen
முதல் நாளே ரசிகர்கள் அட்டகாசம்: கோயம்பேடு ரோஹினி தியேட்டரில் ஸ்க்ரீன் கிழிப்பு!
தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் இன்று வெளியாகிய நிலையில் முதல் நாளே தனுஷ் ரசிகர்கள் ஸ்கிரீன் அருகில் சென்று ஆட்டம் போட்டதால் கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் ஸ்கிரீன் கிழிந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படம் இன்று வெளியாகிய நிலையில் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க தனுஷ் ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்தனர். 
 
இந்த நிலையில் சென்னை கோயம்பேடு  ரோஹினி திரையரங்கில் இன்று காலை முதல் காட்சியின்போது தனுஷ் மற்றும் அனிருத் வந்ததால் ரசிகர்கள் உற்சாகமாகினர். இதனை அடுத்து  தாய்க்கிழவி என்ற பாடல் திரையில் திரையிடப்பட்ட போது திடீரென ரசிகர்கள் ஸ்க்ரீன் அருகில் சென்று ஆட்டம் போட்டனர் 
 
அப்போது எதிர்பாராதவிதமாக ஸ்க்ரீன் கிழிந்ததாக தகவல்கள் வெளியாகின்றன இதுகுறித்து நடவடிக்கை எடுக்க திரையரங்கு நிர்வாகிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது