1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 13 ஆகஸ்ட் 2022 (11:04 IST)

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு மேலும் 4 பேர் வருகை: அகதிகள் முகாமில் தங்கவைப்பு!

refugees
இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு மேலும் 4 பேர் வருகை: அகதிகள் முகாமில் தங்கவைப்பு!
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் வாழ முடியாமல் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு இலங்கை மக்கள் அகதிகளாக சென்று வருகின்றனர்
 
கடந்த சில வாரங்களில் இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு பல அகதிகள் வந்துள்ள நிலையில் இன்று மேலும் 4 பேர் அகதிகளாக வந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இதனை அடுத்து இதுவரை தனுஷ்கோடியில் உள்ள அகதிகள் முகாமில் 120க்கும் மேற்பட்டோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இலங்கை திரிகோணமலை என்ற பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பிளாஸ்டிக் படகுகளில் தனுஷ்கோடி வந்து இறங்கியதும் அவர்களை கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இலங்கையில் இருந்து தொடர்ச்சியாக அகதிகள் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது