புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 28 ஆகஸ்ட் 2019 (20:59 IST)

தனுஷுடன் நேருக்கு நேராக மோதும் ஜிவி பிரகாஷ்!

தனுஷ் மட்டும் ஜிவி பிரகாஷ் ஆகிய இருவரும் கடந்த பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. குறிப்பாக தனுஷ் நடிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் வெளியான 'ஆடுகளம்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதில் இருந்தே இருவரும் நெருக்கமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் 'அசுரன்' படத்தில் தனுஷ் மற்றும் ஜிவி பிரகாஷ் இணைந்து பணியாற்றியுள்ளனர். இந்த படத்தின் இரண்டு பாடல்கள் இன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
 
இந்த நிலையில் தனுஷ் நடித்த 'எனை நோக்கி பாயும் தோட்டா' என்ற திரைப்படம் நீண்ட காலதாமதத்திற்கு பின் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதே தேதியில் ஜிவி பிரகாஷ் நடித்த திரைப்படம் ஒன்றும் ரிலீஸ் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் படம்தான் 'சிவப்பு மஞ்சள் பச்சை' ஆகும். தனுஷ், ஜிவி பிரகாஷ் இருவரும் நெருக்கமாக இருந்து வரும் நிலையில் இருவரது படங்களும் ஒரே நாளில் வெளியாக இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஜீவி பிரகாஷ் ரேஸ் பைக் வீரராகவும் சித்தார்த் டிராபிக் போலீசாகவும் நடித்துள்ள இந்த படத்தை 'பிச்சைக்காரன்' இயக்குனர் சசி இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் லிஜோமால் ஜோஸ், காஷ்மீரா பர்தேஷி, தீபா ராமானுஜம் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சித்துகுமார் இசையமைத்துள்ளார். பிரசன்னகுமார் ஒளிப்பதிவில், சான் லோகேஷ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது