திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (18:55 IST)

சூர்யாவுடன் மோத தயாராகிறாரா சிவகார்த்திகேயன்

சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள படம் வெளியாகவுள்ள அதேநாளன்று சிவகார்த்திகேயனின்  படமும் மோதவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. 
பெரிய நடிகர்கள் படங்கள் பண்டிகை தினங்களில் வெளியிட வேண்டும் என்றும் மற்ற நாட்களை சிறுபட்ஜெட் படங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில்  படங்களில் வெளியாகிவருகிறது.
 
இந்நிலையில் தனுஷுன் பட்டாசு, விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் ஆகிய படங்களை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருந்தது. தற்போது அவை தள்ளிப்போகின்றன.
 
இந்நிலையில் கிருஸ்துமஸ் பண்டிகைக்கு சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை, மற்றும் சூர்யாவின் சூரரைப் போற்று ஆகிய இரு படங்கள் திரைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.