புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (18:30 IST)

'அசுரன்' படத்தில் தனுஷ் இரட்டை வேடமா? அட்டகாசமாக செகண்ட்லுக்!

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அசுரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் சற்றுமுன் தனுஷின் டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் இரண்டாம்லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது
 
இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் தனுஷ் வயதான தோற்றத்தில் காட்சியளித்த நிலையில் இந்த செகண்ட்லுக்கில் சின்னப்பையன் போல் வெகு இளமையாக தோன்றியுள்ளார். இதனால் அவர் இந்த படத்தில் அப்பா-மகன் என்ற இரட்டை வேடத்தில் நடித்திருக்க வாய்ப்பு உள்ளது. அல்லது பிளாஷ்பேக் காட்சியில் தனுஷின் இளமைத்தோற்றம் இருக்கும் என கருதப்படுகிறது. இரண்டு வித்தியாசமான, அட்டகாசமான செகண்ட்லுக் போஸ்டர்கள் தனுஷ் ரசிகர்களின் மாபெரும் ஆதரவை பெற்று லைக்ஸ்களை குவித்து வருகிறது. 
 
தனுஷ் ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடிக்க, இந்த படத்தில் மேலும் பாலாஜி சக்திவேல், பிரகாஷ் ராஜ், பசுபதி, சுப்பிரமணியன் சிவா,  பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடித்து வருகின்றனர். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படம் ழுத்தாளர் பூமணி எழுதிய 'வெக்கை' என்ற நாவலை தழுவி தயாரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.