தனுஷ் & செல்வராகவன் படத்தின் படப்பிடிப்பு எப்போது?

Last Modified ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (09:00 IST)

செல்வராகவன் இயக்கத்தில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்துக்கான முன் தயாரிப்பு வேலைகள் நடந்து வருகின்றன.

தனுஷ் நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில்
உருவாகவுள்ள நானே வருவேன் என்ற படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. தனுஷ் செல்வராகவன் கூட்டணீ 8 ஆண்டுகளுக்குப் பின் இணைந்துள்ள நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் மூலமாக நீண்ட காலத்துக்கு பிறகு செல்வராகவன், யுவன் ஷங்கர் ராஜா மற்றும் அரவிந்த் கிருஷ்ணா ஆகிய மூவர் கூட்டணி இணைந்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என இயக்குனர் அறிவித்துள்ளார். தனுஷ் இப்போது ஹாலிவுட் படத்தில் பிஸியாக இருப்பதாலும், செல்வராகவன் தான் நடிகராக அறிமுகமாகும் சாணிக் காயிதம் படத்தின் வேலைகளில் இருப்பதாலும் படப்பிடிப்பை மே மாதத்துக்குத் தள்ளி வைத்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :