வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 6 பிப்ரவரி 2021 (22:10 IST)

இசையமைப்பாளருடன் இணைந்து பாடிய கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ்.  இவர் தெலுங்கு நடிகர் நிதினுடன் இணைந்து நடித்துள்ள ராங் டே என்ற திரைப்படத்தில் டிரைலர் சமீபத்தில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் அடுத்து இவர் இயக்குநர் செல்வராகவனுடன் இணைந்து சாணிக் காயிதம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த என்ற படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். அத்துடன் 4 தெலுங்குப் படங்கள் மற்றும் 2 மலையாளப் படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நிதினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் ராங்கே டே படத்தில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் சிறந்த முறையில் பாடல்கள் உருவாக்கி வருகிறார். இப்படத்தின் இடம்பெற்றுள்ள ஒரு படலை கீர்த்தி சுரேஷ்  இசையமைப்பாளருடன் இனைந்து பாடியுள்ளார்.

இவர்கள் இருவரும் இணைந்து பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.