ரஜினிக்காக ஒன்று சேரும் இந்திய திரையுலகம்

Last Modified செவ்வாய், 5 நவம்பர் 2019 (22:38 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் தர்பார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் ஆரம்பமாகி விட்டன. இதன் முதல்கட்டமாக இந்த படத்தின் மோஷன் போஸ்டர் நவம்பர் 7ஆம்தேதி அதாவது நாளை மறுநாள் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்

இந்த நிலையில் நாளை மறுநாள் வெளியாக உள்ள தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 4 மொழிகளில் வெளியாக இருப்பதாகவும், இந்த நான்கு மொழி மோஷன் போஸ்டர்களை நான்கு மாநிலங்களில் உள்ள பிரபல நட்சத்திரங்கள் வெளியிட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினி படத்தின் மோஷன் போஸ்டர் ஒன்றை இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து வெளியிட உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ரஜினிகாந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, சுமன், ஆனந்த்ராஜ், ஸ்ரீமான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் ரஜினி ரசிகர்களுக்கான மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :