தர்பார் போஸ்டர், தீம் மியூசிக் ரிலீஸ்? – ட்ரெண்டான #DarbarMotionPoster

Darbar
Prasanth Karthick| Last Modified செவ்வாய், 5 நவம்பர் 2019 (18:49 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் வெளியாகும் நாள் அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் தர்பார். இந்த படத்திற்கான தயாரிப்பு பணிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டரை தீம் மியூசிக்கோடு வெளியிடுவதாக கூறியிருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பேட்ட படத்தின் மூலம் ரஜினிக்கு முதன்முதலாக தீம் மியூசிக் அமைத்தார் அனிருத். இளைஞரான அனிருத் எப்படி இசையமைத்திருப்பாரோ என சிலர் கலக்கமுற்ற நிலையில் பட்டித்தொட்டியெல்லாம் ஹிட் அடித்தது பாடல்கள். அதனால் தர்பார் படத்திற்கும் மாஸ் இசையாக உருவாக்கியிருப்பார் என எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

நவம்பர் 7ம் தேதி வியாழக்கிழமை அன்று மோஷன் போஸ்டருடன் தீம் மியூசிக்கும் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் #DarbarMotionPoster என்ற ஹேஷ்டேகை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :