செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 5 நவம்பர் 2019 (15:24 IST)

நான் செய்த தவறே அந்த படத்தில் நடித்ததுதான்! – இயக்குனரை சாடும் நயன்தாரா!

பிரபல இயக்குனர் ஒருவரின் படத்தை குறிப்பிட்டு அதில் நடித்ததுதான் தவறு என நடிகை நயன்தாரா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகில் முண்ணனி நாயகிகளில் முக்கியமானவராய் இருப்பவர் நயன்தாரா. நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்று கூறப்படுகிறார். மிகப்பெரும் ஹீரோக்களோடு நடிப்பது மட்டுமல்லாமல், பெண்கள் மையப்படுத்திய கதைகளிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நடித்த பிகில் வெளியாகி பெரும் சாதனையை படைத்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நயன்தாரா “நான் என் திரைவாழ்வில் செய்த தவறு கஜினி படத்தில் நடித்ததுதான். முருகதாஸ் என்னிடம் சொன்னபடி அந்த கதாப்பாத்திரம் படத்தில் இல்லை.” என்று கூறியுள்ளார்.

தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தில் நயன்தாராவும் நடித்துள்ளார். இந்நிலையில் தர்பார் படப்பிடிப்பின் போது முருகதாஸ் நயன்தாரா இடையே பிரச்சினை எழுந்ததாகவும், அதன் பிரதிபலிப்பாகதான் முருகதாஸை அவர் விமர்சித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.