ரஜினிகாந்த் பிகில் படம் பார்த்தாரா? இணையத்தில் பரவும் வதந்தி

Last Modified திங்கள், 4 நவம்பர் 2019 (21:20 IST)
தளபதி தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் கடந்த தீபாவளியன்று வெளியான நிலையில் இந்தப் படம் பத்தே நாட்களில் ரூபாய் 200 கோடி வசூல் செய்து விட்டதாக இணையதள டிராக்கர்கள் கூறி வருகின்றனர். ஆனால் உண்மையில் 200 கோடி ரூபாய் வசூல் செய்தததா? இல்லையா? என்பது அந்தந்த வினியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளருக்கு மட்டுமே தெரியும்
இந்த நிலையில் விஜய்யின் பிகில் படத்தை திரையுலக பிரமுகர்கள் பார்த்து பாராட்டி வருகின்றனர். குறிப்பாக ராயப்பன் கேரக்டருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது மனைவி லதாவுடன் நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகை லிசிக்கு சொந்தமான பிரிவியூ தியேட்டர் ஒன்றில் படம் பார்த்தார். அவரை தியேட்டர் நிர்வாகிகள் தகுந்த மரியாதை அளித்து வரவேற்றனர். இந்த இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக வந்த நிலையில் ரஜினியும் அவரது மனைவியும் பிகில் படம் தான் பார்த்ததாக டுவிட்டரில் விஜய் ரசிகர்கள் பதிவுகளை செய்தனர். மேலும் பிகில் படம் குறித்து தனது கருத்தை ரஜினிகாந்த் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது

ஆனால் அவரிடமிருந்து எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை என்பதால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதன் பின்னர் தான் தெரிந்தது அவரும் அவரது மனைவியும் பார்த்தது ஒரு மலையாள படம் என்றும், ஒய்ஜி மகேந்திரன் நடித்த மலையாள படத்தின் சிறப்புக் காட்சியை தான் இருவரும் பார்த்தார்கள் என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்


இதில் மேலும் படிக்கவும் :