ரஜினி பேச்ச கேட்டு ஏமாந்துடேன்: புலம்பும் விநியோகஸ்தர்!!
தர்பார் எனக்கு இரண்டாவது பாட்ஷா என ரஜினிகாந்த் பேசியதை நம்பி படத்தை வாங்கினோம் என புலம்பும் விநியோகஸ்தர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படத்தை வாங்கிய விநியோகித்த சிலர் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவித்து வருகின்றனர். இது சம்மந்தமாக ரஜினியை சந்தித்து தங்கள் இழப்பை பற்றி சொல்ல முயற்சி செய்தனர்.
ஆனால், தர்பார் திரைப்படம் நஷ்டம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் மிகப்பெரிய லாபத்தை அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் கொடுத்திருப்பதாகவும் ஒவ்வொரு திரையரங்கு உரிமையாளர்களும் தங்கள் டிவிட்டர் பக்கங்களில் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விநியோகஸ்தர் திருவேங்கடம் படம் வாங்கியதை குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, தர்பார் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டின் போது நடிகர் ரஜினிகாந்த் இது இரண்டாவது பாட்ஷா என்று குறிப்பிட்டார்.
அதேபோல இயக்குனர் முருகதாஸ் கடைசி இருபது நிமிடம் இந்த படத்தின் காட்சிகள் மிக விறுவிறுப்பாக இருக்கும் என்றும் இப்படிப்பட்ட திரைப்படம் முக்கிய மைல் கல்லாக இருக்கும் என்றெல்லாம் தெரிவித்ததால் நம்பிக்கை அடிப்படையில் படத்தை வாங்கினோம். ஆனால், 25 சதவீதம் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதுதான் மிச்சம் என புலம்பியுள்ளார்.