பொண்டாட்டினு சொல்லி என்ன பேசியிருக்கு இந்த பொம்பள? ஜோதிகாவை வறுத்தெடுத்த சுசித்ரா
சூர்யா நடித்த கங்குவா திரைப்படத்திற்கு ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் வெளியான நிலையில் நேற்று ஜோதிகா தனது சமூக வலைதளத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார். ஆபாச படங்களுக்கும் இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட படங்களுக்கும் இல்லாத நெகட்டிவ் விமர்சனங்கள் இந்த படத்தில் வந்துள்ளதாகவும், வேண்டும் என்றே திட்டமிட்ட சதி என்றும் அவர் கூறியிருந்தது. பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், பாடகி சுசித்ரா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ஜோதிகாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "பொண்டாட்டின்னு சொல்லி என்ன மாதிரியான விஷயங்களை பேசி இருக்கு இந்த பொம்பள?" என்று அவர் கேள்வி எழுப்பி, "இந்த பொம்பள படத்தை பற்றி இப்படி பேசியது மேலும் கங்குவா படத்திற்கு பாதிப்பை தான் ஏற்படுத்தும்" எனத் தெரிவித்துள்ளார்.
அதோடு, இங்கிலீஷ் தெரிஞ்சா எழுதணும் அல்லது வேறு யாரையாவது எழுத வைத்து சொல்லணும். i am so proud of surya என்று எழுதி இருக்கிறாள். மேலும் என்னைக்காவது சினிமாவை தாங்கிப் படிக்கணும்னு சூர்யா இதற்கு முன் சொல்லிருக்கானா?" எனவும் அவர் கூறியுள்ளார்.
"எப்ப பார்த்தாலும் சூர்யா ஜோதிகா, சூர்யா ஜோதிகா சொல்லிக்கிட்டு இருக்கீங்க. இவர்கள் என்ன மாற்றான் பிரதர்ஸா?" என்று கடுமையாக பாடகி சுசித்ரா பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.