வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 16 நவம்பர் 2024 (11:24 IST)

கங்குவா விமர்சனத்தால் மீண்டும் அமரன் படம் பார்க்க ஆர்வம் காட்டும் ரசிகர்கள்!

சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கத்தில் இருந்த ‘கங்குவா’ திரைப்படம் நேற்று முன் தினம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸானது. இந்த  படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக 2D மற்றும் 3D தொழில்நுட்பத்தில் இயக்கியுள்ளார். படத்தில் பாபி தியோல், திஷா பதானி, நட்டி நட்ராஜ் உள்ளிட்டவர்கள் நடிக்க, வெற்றி ஒளிப்பதிவு மேற்கொள்ள, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான கங்குவா முதல் காட்சிக்குப் பிறகு மிகப்பெரிய அளவில் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது. இதனால் முதல் நாள் வசூலே 58 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கங்குவா எதிர்மறை விமர்சனங்களால் வார விடுமுறை நாட்களில் அந்த படம் பார்க்க செல்பவர்களின் எண்ணிக்கையை விட இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளியான அமரன் திரைப்படத்தைப் பார்க்க அதிகமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். புக் மை ஷொ இணையதளத்தில் கங்குவா படத்துக்கு முன்பதிவு செய்பவர்களை விட அமரன் படத்துக்கு முன்பதிவு செய்பவர்கள் அதிகமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.