வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 16 நவம்பர் 2024 (10:56 IST)

ரிலீஸுக்குப் பின்னுமா…? கங்குவா 2 அப்டேட் கொடுத்த ஞானவேல் ராஜா!

சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கத்தில் இருந்த ‘கங்குவா’ திரைப்படம் நேற்று முன் தினம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸானது. இந்த  படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக 2D மற்றும் 3D தொழில்நுட்பத்தில் இயக்கியுள்ளார். படத்தில் பாபி தியோல், திஷா பதானி, நட்டி நட்ராஜ் உள்ளிட்டவர்கள் நடிக்க, வெற்றி ஒளிப்பதிவு மேற்கொள்ள, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான கங்குவா முதல் காட்சிக்குப் பிறகு மிகப்பெரிய அளவில் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது. இதனால் முதல் நாள் வசூலே 58 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

படம் குறித்து ஒட்டுமொத்தமாக எதிர்மறை விமர்சனங்கள் வெளியாகியுள்ள நிலையில் இன்னமும் கங்குவா பார்ட் 2 வரும் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசிவருகிறார். இதுபற்றிப் பேசிய ஞானவேல் ராஜா ‘கங்குவா படத்துக்கு பிறகு சிவா சார் அஜித் சாருடன் ஒரு படம் பண்ணுகிறார். அந்தபடம் முடிந்ததும் 2026 ஆம் ஆண்டு கங்குவா 2 வேலைகள் தொடங்கும்” எனக் கூறியுள்ளார்.