ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (19:35 IST)

கிரிக்கெட் வீரர் ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு மீண்டும் திருமணம்

Harthick Pandya
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்த்திக் பாண்ட்யா தன் மனைவியை இரண்டாவதாக திருமணம் செய்யவுள்ளார்.
 

இந்திய கிரிக்கெட் அணியில் டி-20 போட்டிகளுக்கு கேப்டனாக பொறுப்பு வகிப்பவர் ஹர்த்திக் பாண்ட்யா.

இவர், கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் செர்பிய நடிகை   நடாஷா ஸ்டாங்கோவிக் என்பவரை நிச்சயம் செய்து, மே மாதம் திருமணம் செய்தார்.

திருமணத்தின்போது, கர்ப்பமாக இருந்த நடாஷா  ஜூலையில், ஆண் குழந்தையைப் பெற்றார்.

இவர்கள் திருமணம் நடந்து 3 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், ஹர்த்திக் பாண்ட்யா – நடாஷாவின் திருமணம் பல கோடி செலவில் பிரமாண்டமாக  நடக்கவுள்ளதாகவும், இதில், பிரபல வீரர்களுக்கும், சினிமா  நட்சத்திரங்களுக்கும் அழைப்பு வைத்து விருந்து வைக்கப்பட உள்ளதாகத்  தகவல் வெளியாகிறது.

சமீபத்தில், ராகுல்- அதியா ஷெட்டி ஷெட்டியின் திருமணத்தின்போது, கிரிக்கெட் வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் பரிசு மழை பொழித்தது குறிப்பிடத்தக்கது.