1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 9 ஜனவரி 2024 (17:24 IST)

' கேப்டன் மில்லர்' படத்தை இணையதளத்தில் வெளியிட நீதிமன்றம் தடை

captain miller
நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தை  இணையதளத்தில் வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ். இவர்  நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கேப்டன் மில்லர்’.

இந்த படத்தின் நாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.  தனுஷுடன் இணைந்து சிவராஜ்குமார், சந்திப் கிசான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தள்ளது.

சமீபத்தில், கேப்டன் மில்லர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், கடந்த 6 ஆம் தேதி இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

வரும் பொங்கலை முன்னிட்டு கேப்டன் மில்லர் படம்  வரும் ஜனவரி மாதம் 12 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தை இணையதளங்களில் வெளியிட தடைவிதித்து  இன்று சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாவது: தனுஷின் கேப்டன் மில்லர் படத்தை சட்டவிரோதமாக 1166 இணையதளங்களில் வெளியிடுவதை தடுக்க இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.