வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 9 ஜனவரி 2024 (11:22 IST)

சிம்புவுடன் நடித்தே தீருவேன்! - நடிகை தேவயானி ஷர்மா பிடிவாதம்!

Devayani sharma
டெல்லியை பூர்விகமாக கொண்ட நடிகை தேவயானி ஷர்மா, ஹிந்தி  மற்றும் தெலுங்கு திரையுலகங்களில் வலம் வருகிறார். 


 
2021 ஆம் ஆண்டு , ரொமான்டிக் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் இணை கதாநாயகியாக திரையுலகத்திற்கு அறிமுகமான இவர் பலவிதமான நாட்டிய கலைகளில்  தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

தேவயானி  ஷர்மா பேசியது:

"ஹிந்தி , தெலுங்கு என்ற  மொழிகளில் நான் படங்கள்   பண்ணுனாலும் எனக்கு தமிழில் படம் பண்ண வேண்டும் என்று ஆசை எப்பொழுதும் உள்ளது.   

சாதாரண கதாநாயகியாக  மட்டுமில்லாமல்,என் நடிப்புத் திறனை முழுவதும்  செயல்படுத்தி  மக்கள் அனைவரும் விரும்பும் ஒரு நடிகையாக வலம் வர வேண்டும். 

 
கீர்த்தி சுரேஷ் சாய் பல்லவி இவர்களெல்லாம் எனக்கு மிகவும் பிடித்த நடிகைகள்,  இவர்கள்தான் எனக்கு  முன்னுதாரணம். வாழ்வில் என்னுடைய லட்சியம் என்னவென்றால் சிம்புவிற்கு ஜோடியாக நடிப்பதை ஆகும்.

இதற்கான ஒரு முழு வீச்சில் இறங்கி உள்ளேன்,அதற்கான வேலையும் தொடங்கி விட்டது.   அதுமட்டுமின்றி மக்கள்  நான் பார்க்கும் வேலையை அங்கீகரித்து  என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய வாழ்வின் லட்சியமாகும்.

இவ்வளவு குறிக்கோளும் நற்செயமும் கொண்ட தேவயானி தமிழ், தெலுங்கு,ஹிந்தி என ஒரு கலக்கு கலக்குவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.