ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 20 அக்டோபர் 2023 (20:44 IST)

தனுஷுடன் என்னை ஒப்பிட வேண்டாம்- பிரதீப் ரங்கநாதன்

Pradeep
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பிரதீப் ரங்க நாதன். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி  நடிப்பில் கோமாளி என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படம் வெற்றி பெற்ற நிலையில், 2022 ஆம் ஆண்டு  லவ் டுடே என்ற படத்தை  இயக்கி நடித்திருந்தார்.

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் 5 கோடி பட்ஜெட்டில் உருவான நிலையில்,  இத்திரைப்படம் உலகளவில் சுமார் 70 கோடி ரூபாய் வசூல் செய்து நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில்,  தனுசுடன் என்னை ஒப்பிட வேண்டாம் என்று நடிகர் பிரதீப் ரங்கநாதன் கூறியுள்ளார்.

''நான் பேசுவது, என் செயல்பாடுகள் எனது நடவடிக்கை எல்லாம் நடிகர் தனுஷ் போல இருப்பதாக கூறுகிறார்கள், ஆனால், அது உண்மையா என்று எனக்குத் தெரியவில்லை. நான் தனுஷ் போல இருப்பதாக ஒப்பிட்டு பேசுவது தவறு என்று நினைக்கத் தோன்றுகிறது…. அவர் எங்கேயோ இருகிறார்… நான் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.