1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (12:13 IST)

ஜி பி முத்து கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகர் புகார்!

டிக்டாக் பிரபலம் ஜி பி முத்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகர் காதல் சுகுமார் புகாரளித்துள்ளார்.

காதல் படம் மூலமாக தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் காதல் சுகுமார். அதன் பின்னர் பல படங்களில் நடித்தாலும் இன்றளவும் காதல் சுகுமார் என்றே அழைக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று சென்னையில் காவல் நிலையத்தில் ஒரு புகாரளித்தார். அதில் டிக்டாக் பிரபலமான ஜி பி முத்து உள்ளிட்ட பலர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகக் கூறியுள்ளார்.

அதில் ‘மாணவர்கள் இப்போது ஆன்லைன் வழியாக கல்வி கற்று வருகின்றனர். ஆனால் டிக்டாக் இலக்கியா, ஜி பி முத்து மற்றும் ரவுடி பேபி சூர்யா ஆகியவர்களின் வீடியோக்கள் அவர்களை தீய வழிக்கு இழுப்பதுபோல உள்ளதாக காவல் நிலையத்தில் புகாரளித்தேன். ஊடகங்களிலும் அது சம்மந்தமாக பேசினேன். இதையடுத்து ஜி பி முத்து உள்ளிட்டவர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.’ என அந்த புகாரில் கூறியுள்ளார்.