நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய காமெடி நடிகர்

Sinoj| Last Modified வியாழன், 8 ஏப்ரல் 2021 (23:02 IST)


நடிகர் யோகிபாபு தனது சொந்த ஊரில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடினார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

சமீபத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான திரைப்படம் ‘மண்டேலா’ என்பதும் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்திருந்த இந்த படத்தில் நாயகியாக ஷீலா ராஜ்குமார் நாயகியாக நடித்து இருந்தார்.

இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆன நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. மிகச்சரியாக தேர்தல் நேரத்தில் வந்துள்ள இந்த படம் தேர்தல் சம்பந்தப்பட்ட கதை என்பதால் ரசிகர்கள் ரசித்தார்கள்.

இந்நிலையில், தேர்தலுக்காக தனது சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூருக்குச் சென்ற அவர் தனது ஜனநாயகக் கடமை ஆற்றினார்.
பின்னர் வேஷ்டி கட்டிக்கொண்டு தனது பால்யகால நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடினார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :